3D வளைந்த AMOLED டிஸ்ப்ளே, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், சோனி சென்சார் கொண்ட கேமரா போன்ற பிரீமியம் அம்சங்களுடன், ரூ.39,999 பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 11R போன், அமேசான் தள்ளுபடியில் இதுவரை இல்லாத விலையில் வந்துள்ளது.
பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ.14,999 குறைக்கப்பட்டுள்ளது. பெல்ட் ஷேக்கிங் தள்ளுபடியில் பாக்கா பிரீமியம் மாடலை வாங்கத் திட்டமிடும் ஒன்பிளஸ் பிரியர்களுக்கு இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது. இந்த பட்ஜெட் ஒன்பிளஸ் 11ஆர் போன் பேக்குகள் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது என்று பார்ப்போம்.
இந்த போனின் கேமரா, டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி அம்சங்கள் பிரமிக்க வைக்கிறது. இது மிட்-பிரீமியம் செயல்திறன் சிப்செட் மற்றும் கிராபிக்ஸ் உடன் வருகிறது. வடிவமைப்பு அல்ட்ரா பிரீமியம் தோற்றத்தையும் தருகிறது. மேலும், வேகன் லெதர் பேக் பேனலுடன் கூடிய மாறுபாடும் விற்பனைக்கு உள்ளது.
OnePlus 11R 5G Specifications
ஒன்பிளஸ் 11ஆர் அம்சங்கள்: இந்த ஃபோன் 3D வளைந்த வடிவமைப்புடன் 6.74-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. பேனல் 120Hz புதுப்பிப்பு வீதம், 360Hz தொடு மாதிரி வீதம் மற்றும் 450 ppi பிக்சல் அடர்த்தியுடன் வருகிறது.
மேலும், sRGB, P3 கலர் காமெட் மற்றும் HDR10+ ஆகியவற்றுக்கான ஆதரவுடன், இந்த மாடலில் இருந்து பிரீமியம் காட்சி வெளியீட்டை எதிர்பார்க்கலாம். Eye Comfort, Video Color Enhancer, Screen Colour Matte, Screen Colour Temperature, Bright HDR Video Mode போன்ற டிஸ்பிளே அம்சங்கள் வருகின்றன.
சிப்செட்
OnePlus 11R ஆனது OxygenOS அடிப்படையிலான Android 13 OS உடன் வருகிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜெனரல் 1 மொபைல் சிப்செட் பேங் ஃபார் தி பக் செயல்திறனுடன் வருகிறது. இது Adreno 730 GPU கிராபிக்ஸ் உடன் வருகிறது, இது கேமிங் பிரியர்களுக்கு நல்ல வெளியீட்டை அளிக்கிறது.
பேட்டரி
இது உயர்நிலை பேட்டரி அமைப்புடன் வருகிறது. 100W SuperVolume சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரி வழங்கப்படுகிறது. இது Sony IMX890 சென்சார் மற்றும் 50 MP பிரதான கேமராவுடன் ஆட்டோஃபோகஸ் + 8 MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவுடன் நிலையான ஃபோகஸுடன் வருகிறது.
கேமரா
மேலும், இது 2 எம்பி மேக்ரோ கேமராவுடன் கூடிய பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது OIS/EIS தொழில்நுட்பம், 4K வீடியோ பதிவு, PDAF, LAF மற்றும் CAF ஆட்டோஃபோகஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. நைட்ஸ்கேப், அல்ட்ரா எச்டிஆர், போர்ட்ராய்டு, ப்ரோ போன்ற மோடுகள் வருகின்றன.
16MP செல்ஃபி ஷூட்டர் EIS, Pixfocus, 1080P வீடியோ பதிவு மற்றும் செல்ஃபி HDR அம்சங்களுடன் வருகிறது. எனவே, இந்த OnePlus 11R மாடல் கேமரா பிரியர்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். இது இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் சத்தம் ரத்து செய்யும் ஆதரவுடன் வருகிறது.
மெமரி
OnePlus 11R போனின் 8GB RAM + 128GB மெமரி அமேசானில் ரூ.27,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கனரா வங்கி கார்டுகளுக்கு ரூ.2,500 மற்றும் பிற வங்கி கார்டுகளுக்கு ரூ.2,000 உடனடி தள்ளுபடியையும் இந்த பட்ஜெட் வழங்குகிறது. எனவே, இந்த போனை ரூ.24,500 பட்ஜெட்டில் வாங்கலாம்.
.png)
