Apple iPhone யூசருக்கு அடுத்தது ஜாக்பாட் ஆப்பர் ஐபோன் வாங்குறீங்களா
Flipkart இன் Month End Mobile Fest விற்பனையில், Apple iPhone 14 Plus மாடல் பெரும் தள்ளுபடியைப் பெறுகிறது. ஐபோன் 14 பிளஸ் மாடல் ஐபோன் 14 போன்ற அம்சங்களை "கிட்டத்தட்ட" கொண்டுள்ளது. ஆனால் இது பெரிய டிஸ்ப்ளே மற்றும் சற்று பெரிய பேட்டரியுடன் வருகிறது.
இந்தியாவில், ஐபோன் 14 பிளஸின் அடிப்படை சேமிப்பு விருப்பம் ரூ.89,900க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் தனது புதிய ஐபோன் 15 பிளஸை அறிமுகப்படுத்தியபோது, பழைய ஐபோன் 14 பிளஸ் மாடலின் விலையை ரூ.10,000 குறைத்தது. இது இப்போது Flipkart இல் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் இதுவரை கண்டிராத விலையில் கிடைக்கிறது.
தற்போது Flipkart இல், iPhone 14 Plus மாடல் ரூ.12,901 நேரடி தள்ளுபடியுடன் ரூ.66,999 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது தவிர, சிட்டி பிராண்டட் கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு ரூ.2000 தள்ளுபடியும் கிடைக்கும். இதன் மூலம் ஐபோன் 14 பிளஸ் விலை ரூ. 64,999.
மேலும் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றினால் ரூ.50,000 வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் மதிப்பு கிடைக்கும். மேலே உள்ள அனைத்து சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடிகள் சரியாக பயன்படுத்தப்பட்டால், ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் மாடலின் இறுதி விலையை நம்பமுடியாத அளவிற்கு குறைக்கலாம் (அதிகபட்சம் ரூ. 20,000-க்குள் கொண்டு வரலாம்).
ஐபோன் 14 பிளஸ் மாடலின் முக்கிய அம்சங்கள்: இதில் 6.7 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இது ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் காணப்படும் மேம்படுத்தப்பட்ட A15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் மாடல் 5ஜி ஆதரவையும் கொண்டுள்ளது.
பேட்டரியைப் பொறுத்தவரை, ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 26 மணி நேரம் வரை நீடிக்கும் என்று ஆப்பிள் கூறுகிறது. கேமராக்களைப் பொறுத்தவரை, இது 12MP பிரதான சென்சார் மற்றும் 12MP அல்ட்ரா-வைட் சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. iPhone 14 Plus மாடல் நீலம், ஊதா, மிட்நைட், ஸ்டார்லைட் மற்றும் சிவப்பு என மொத்தம் 5 வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
ஆப்பிள் ஐபோன்களில் மற்ற சலுகைகளைப் பொறுத்தவரை, பழைய ஐபோன் 12 இப்போது ரூ.49,900க்கு பதிலாக ரூ.44,999க்கு கிடைக்கிறது. சமீபத்திய iPhone 15 மாடலின் இளஞ்சிவப்பு வண்ண விருப்பம் ரூ.79,900க்கு பதிலாக ரூ.68,999க்கு வாங்குவதற்கு கிடைக்கிறது; மறுபுறம் நீலம் மற்றும் கருப்பு வண்ண விருப்பம் ரூ.67,999க்கு வாங்குவதற்கு கிடைக்கிறது.
நீங்கள் iPhone 13 மாடலை வாங்க விரும்பினால், Flipkart அதை ரூ.59,900க்கு பதிலாக ரூ.52,999க்கு விற்பனை செய்கிறது. அதேபோல் ஆப்பிள் ஐபோன் 14 (ஐபோன் 14) மாடல் ரூ.69,900 அசல் அறிமுக விலைக்கு பதிலாக ரூ.56,999க்கு கிடைக்கிறது.